பிரபல நடிகர்கள் லேடி கெட்டப்போட்டு நடித்த படங்கள் புகைப்படங்கள்
பிரபலமான பல தமிழ் நடிகர்கள் லேடி கெட்டப் போட்டு அசத்தியுள்ளார்கள்
அதில் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் விஜய் , விஜயகாந்த், கவுண்டமணிபோன்ற
பல தமிழ் பிரபலங்கள் பெண் வேடமிட்டு நடித்து அசத்தினார்கள் அதில் சிலவற்றை இங்கே பார்க்கலாம் வாங்க
காதல் வாகனம் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தில் எம்ஜிஆர் பெண் வேடமிட்டு நடித்து அசத்தியுள்ளார் பார்க்காதவர்கள் யூடியூப் சென்று பெயரை உள்ளிட்டு பாருங்கள்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பெண் வேடமிட்டு குங்குமம் என்ற படத்தில் 1963 ஆம் ஆண்டில் கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. மோகனின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
உலக நாயகன் கமல் ஹாசன் அவ்வை சண்முகி திரைப்படத்தில் பெண் வேடமிட்டு நடித்து அசத்தியுள்ளார் அந்த திரைப்படம் (1996) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மீனா, நாகேஷ், ஜெமினி கணேசன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.இத்திரைப்படம் ராபின் வில்லியம்ஸ் நடித்த மிசஸ் டவுட்ஃபயர் என்னும் ஆங்கிலப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது. இந்த திரைப்படம் முழுவதும் பெண் வேடமிட்டு நடிகர் கமல்ஹாசன் அசத்தியுள்ளார்
நடிகர் சரத்குமார் கட்டப்பொம்மன் திரைபடத்தில் பெண் வேடமிட்டு நடித்து அசத்தியுள்ளார் கட்டபொம்மன் திரைப்படம் 1993ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை மணிவாசகம் இயக்கினார்.தேவா இசையமைப்பில் வெளிவந்த இப்படத்தில் சரத்குமார், வினிதா, நாகேஷ், கவுண்டமணி, செந்தில் போன்றோர் நடித்திருந்தனர்இந்த திரைப்படத்தில் கவுண்டமணி மற்றும் சரத்குமார் பெண் வேடமிட்டு மிகவும் ரசிக்கும் படி நடித்துள்ளனர்
.
Post a Comment
0Comments