நெருக்கமான முத்தக் காட்சியில் நடிக்க மறுத்த பிரபல நடிகை
இவர் 2012ம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வழக்கு எண் 18/9, என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அந்த திரைப்படத்துக்கு 60 வது தேசிய திரைப்பட விருதுகள், 2 வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள், தெற்காசிய திரைப்பட விருதுகள் மற்றும் 7 வது விஜய் விருதுகள் என பல விருதுகளை வென்றது. அதன் மூலம் விஜய் விருது சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை வென்றார். அதே ஆண்டில் துணிக துணிக என்ற தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார்.
வழக்கு எண் 18/9 திரைப்படத்தில் நடித்தார் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இப் படத்தை பாலாஜி சக்திவேல் எழுதி இயக்கி உள்ளார். சமூக ஏற்றத்தாழ்வு, ஊழல், குழந்தைத் தொழிலாளர்கள், ஆபாசம், இளையோர் பிரச்சினைகள் ஆகிய சமூகச் சிக்கல்களை ஒரு காதல் கதையின் ஊடாக இப்படம் அமைந்தது.
2012 வழக்கு எண் 18/9 தமிழ் திரைப்படம் விஜய் விருது சிறந்த அறிமுக நடிகைக்கான விருது வாங்கினார்
இந்த திரைப்படம் 2012 ஆம் ஆண்டுக்கான தேசிய பிராந்திய மொழி படமாக வழக்கு எண் 18/9 படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒப்பனைக்கான தேசிய விருதையும் பெற்றது
2012 தூனிகா தூனிகா தெலுங்கு திரைப்படம்
2013 ஆதலால் காதல் செய்வீர் தமிழ் திரைப்படம்
2013 ஜன்னல் ஓரம் தமிழ் திரைப்படம்
2014 பட்டைய கெளப்பனும் பாண்டியா தமிழ் திரைப்படம்
2018 ஒரு குப்பை கதை பார்த்திபன் இயக்கத்தில்
ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்
இந்த நிலையில், இளையராஜா இசையில் உருவாகிவரும் பள்ளி பருவக் காதல் படம் நினைவெல்லாம் நீயடா. இப்படத்தை ஆதிராஜான் இயக்கி வருகிறார்.பிரஜின் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் மனிஷா ஹீரோயினாக நடிக்கிறார். ஆனால் இப்படத்தில் முத்தக் காட்சியில் நடிக்க மாட்டேன் என்று கூறியதால் இயக்குனருக்கும் மனிஷாவுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது போன்ற சுவாரஸ்யமான தகவல்கள் அறிந்து கொள்ள நமது வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க யூடியூப் சேனல் சப்கிரைப் பண்ணுங்க
நன்றி ✍️✍️
Post a Comment
0Comments