தேவர் மகன் திரைப்படம் பல ஆஸ்காரை மக்கள் மனதில் வென்ற திரைப்படம் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்
தேவர் மகன் 1992 ஆம் ஆண்டு தீபாவளி நாளில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். 1992 ஆண்டிற்கான 40வது இந்திய தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் இத்திரைப்படம் பல பிரிவுகளில் 5 விருதுகளை வென்றது. இத்திரைப்படம் ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இத்திரைப்பட வெற்றியினை அடுத்து இந்தியில் விரசாத் என்ற திரைப்படப் பெயரில் மறுதயாரிப்பு செய்யப்பட்டது.கமல்ஹாசன் இத்திரைப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை மொத்தம் ஏழு நாட்களுக்குள் எழுதி முடித்தார். ஆனந்த விகடன் நாளிதழ் இத்திரைப்படத்திற்கு 60 மதிப்பெண் வழங்கியுள்ளது.
தேவர்மகன் அக்டோபர் 25 1992 வெளிவந்த இந்த திரைப்படம்,31 வருடம் ( 2023) நிறைவுபெற்றது
கமல்ஹாசனின் வசூல் மழை பொழிந்த படங்களகளில் குரு சகலகலா வல்லவன் அபூர்வ சகோதரர்கள்
வரிசையில் முதன்மையானது
தேவர்மகன் திரைப்படம்
கமல் படங்களிலேயே அதிக மக்களால் பார்க்கப்பட்ட படம் என புள்ளி விவரங்கள் சொல்லுகிறது.
நான் இன்னும் நடிகர் திலகம்தான் என்று சிவாஜிக்கு கடைசியாக பெருமை சேர்த்த படம்
திரைக்கதை என்றால் என்ன என்று பல இயக்குனர்களுக்கு வகுப்பு எடுத்த படம்.
மிரட்டும் நாசர்
அசல் பஞ்சவர்ணமாக
ரேவதி காதலனை விட்டு கொடுக்கும் பானுவாக கௌதமி ராக ராஜாங்கம் நடத்திய ராஜா.
கண்ணுக்கு குளிர்ச்சியாக காட்சிப்படுத்திய ஶ்ரீராம்
அழகியலோடு இயக்கிய பரதன்
அனைவரையும் ஒரே நேர்கோட்டில் இணைத்து
கதை, திரைக்கதை, வசனம் அமைத்து
31 ஆண்டுகளாக நம் இதயங்களை வருடிக்கொண்டே இருக்கும் . மேலும் தேவர் மகன் திரைப்படம் ஆஸ்கார் விருது பரிந்துரையை செய்த
கமல்ஹாசன் இத்திரைப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை மொத்தம் ஏழு நாட்களுக்குள் எழுதி முடித்தார். ஆனந்த விகடன் நாளிதழ் இத்திரைப்படத்திற்கு 60 மதிப்பெண் வழங்கியுள்ளது.
இதில் நடித்த நடிகர்கள்
சிவாஜி கணேசன் - பெரிய தேவர் வேடத்தில் மிகவும் கம்பீரமான தோற்றத்துடன் இருப்பார் படத்தின் இவர் இறந்த காட்சியில் கண்கலங்காதவர்கள் இல்லை
கமல்ஹாசன் - சக்திவேல் கேரக்டரில் படித்த வெளிநாட்டு இளைஞனாக கச்சிதமாகவும் பின்பு சிவாஜி அரியணையில் மிகவும் பொருத்தமாகவும் இருப்பார்
கௌதமி - பானுமதி கேரக்டரில் நாகரீக பெண்ணாக அசத்திருப்பார்
ரேவதி - பஞ்சவர்ணம் கேரக்டரில் மண்மனம் மாறாமல்
நடித்திருப்பார்
நாசர் - மாயாண்டி தேவர் கேரக்டரில் இன்றைய வில்லன்களின் நடிப்புக்கு முன்னோடியாக சிவாஜி கணேசன் சார் நடிப்புக்கு இனையாக நடித்ததாக
அவரே பாராட்டிய நடிப்பு
காகா இராதாகிருஷ்ணன் - சின்ன தேவர் வீல் சேரில் அமர்ந்து கொண்டு பேசாமல் அவரின் நடிப்பு பேசியிருக்கும்
எஸ். என். லட்சுமி - மாயாண்டி தேவரின் தாய்க்கு உண்டான பொருத்தமான நடிப்பு
தலைவாசல் விஜய் - சக்திவேலின் மூத்த சகோதரர்
ஒரு குடிகாரன் பொறுப்பற்ற அண்ணணாக வாழ்ந்திருப்பார்
கள்ளபார்ட் நடராஜன் - பரமசிவம் விவசாய நிலம் வைத்திருக்கும் இன்றைய விவசாயிகள் நிலமையை
அன்றே சொல்லிய நடிப்பு
சங்கிலி முருகன் - கணக்குபிள்ளை பல படங்களில் கணக்குபிள்ளையாக நடித்திருந்தார் இதன்பிறகு
ஒரு வில்லன் நடிகரான அவரை உடல் மோழியை மாற்றி நடித்திருப்பார்
வடிவேலுவால் எப்பேற்பட்ட கேரக்டரில் நடிக்க முடியும் என்பதற்கு _ எசக்கியாகவே நடித்த இன்றய மாமன்னன் வரை நிரூபித்துள்ளார்
மதன் பாப் - வக்கீல் அவரை இன்றுவரை மக்கள் வக்கீலாகவே பார்க்கின்றனர் படம் பார்த்த மக்கள்
அஜய் ரத்னம் - காவல் ஆய்வாளராக்கு ஏற்ற முகம் அவரது உயரத்திற்கு ஏற்ற கேரக்டர்
நீலிமா - மாயாண்டி தேவரின் மகள் ஒருசில சீன்களில் வந்தாலும் மனதில் நின்ற கேரக்டர்
காந்திமதி - சிறப்பு தோற்றம் ஆனால் சிறப்பான நடிப்பு
நண்பர்களே இது போன்ற சுவாரஸ்யமான தகவல்கள் தெரிந்து கொள்ள நமது வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க யூடியூப் சேனல் உள்ளது அதையும் சப்கிரைப் பண்ணுங்க
நன்றி ✍️✍️✍️
Post a Comment
0Comments