அடிமை பெண் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் மற்றும் அதில் நடித்த எம்ஜிஆர் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்
1969 ஆம் வெளிவந்த எம்ஜிஆர் நடித்த
அடிமைப்பெண் பற்றி பலருக்கும் தெரியும்
இன்றைய தலைமுறை மற்றும் பழய தலைமுறைக்கு இந்த தகவல்கள்
சுவாரஸ்யமான இருக்கும் என்று நம்புகிறோம்
வாங்க பார்க்கலாம் நண்பர்களே
மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த அடிமைப் பெண் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்
1. மக்கள் திலகத்தின் நாடோடி மன்னன் -1958 பிறகு வந்த இரண்டாவது சொந்த படம் .
2. ஏராளமான பொருட் செலவில் உருவாக்கப்பட்ட படம் .
3. ஜெய்ப்பூர் அரண்மனை மற்றும் பாலைவனத்தில் எடுக்கப்பட்ட படம் .
4. தமிழ் பட வரலாற்றில் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் பிரமாதமாக படமாக்கப்பட்ட படம் .
5. ஆரம்ப காட்சியில் வலையில் மக்கள் திலகம் - அசோகன் மோதும் சண்டைக்காட்சி [ஒற்றைக்காலில் ] புதுமையானது .
6. மக்கள் திலகம் கூனனாக அறிமுக காட்சி முதல் சிறையிலிருந்து தப்பிக்கும் வரை பரபரப்பு காட்சிகள் விறு விறுப்பானவை . மக்கள் திலகத்தின் கூன் வேடம் அருமை . குனிந்து நடந்து வரும் காட்சிகள் மிக சிறப்பாக இருக்கும் .
7. முதன் முதலில் மக்கள் திலகம் குனிந்து நடந்து வரும் போது அவருடைய நிழலுக்கு கூட கைத் தட்டல் கிடைத்த படம் .
8. நீர்வீழ்ச்சியில் சண்டை கற்று கொள்ளும் காட்சிகள் பின்னர் தனது தாயாரை சந்திக்கும் காட்சி - உருக்கமாக பேசிய காட்சி - தாயில்லாமல் நானில்லை பாடல் காட்சிகளில் மக்கள் திலகம் எம்ஜிஆரின் நடிப்பு அருமை
9. காலத்தை வென்றவன் ...நீ பாடலில் ஒரு வெற்றி வீரராக காட்சி முழுவதும் நிமிர்ந்த
நடையோடு புன்னகையோடு பிரமாதமாக நடித்திருப்பார் .
10.ஊட்டி பகுதிகளில் வேங்கயன் - ஜீவாவும் பிரியும் இடம்- பாலைவனத்தில் மாறு வேடத்தில் பாடும் ஏமாற்றாதே .....பாடல் மக்கள் திலகத்தின் நடிப்பு -ஜெயாவின் நடனமும் சூப்பர்.
11.பவள நாட்டில் ராணி முன் மக்கள் திலகம் தனது பலத்தை நிருபிக்கும் அட்டகாசமான
காட்சியில் மக்கள் திலகத்தின் உடற்கட்டும் - அழகிய தோற்றமும் ...கண்ணுக்கு விருந்து
12. ஆயிரம் நிலவே வா ... பாடல் கேட்கவே வேண்டாம் . பட்டி தொட்டி எங்கும் ஒலித்துக்கொண்டிருக்கும் மன்மதனின் பாடல் .
13.உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது ..... இந்த பாடல் படமாகப்பட் டவிதமும் காட்சிகளும் அருமை .
14. சிங்கத்துடன் மக்கள் திலகம் மோதும் காட்சி - துணிச்சலுக்கு ஓர் எடுத்துக்காட்டு .
15. ஆங்கில படத்துக்கு இணையாக வந்த மக்கள் திலகத்தின் மாபெரும் வெற்றி படம்
இது போன்ற சில சுவாரஸ்ய தகவல்கள் மற்றும்
நாம் அறியாத தகவல்கள் தெரிந்து கொள்ள
நம்ம வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க
யூடியூப் சேனல் உள்ளது அதையும் சப்கிரைப்👇👇 பண்ணுங்க
website
https://info10world.blogspot.com/
YouTube channel name 👇👇✍️
info10world
Post a Comment
0Comments